வாழ்க்கை வெற்றிக்கு மூன்று ஆயுதங்கள்:


5.0  வாழ்க்கை வெற்றிக்கு மூன்று ஆயுதங்கள்:

வளரிளம் பெண்களின் வாழ்க்கையில் வெற்றிக்குத் தேவையான முயற்சி, தன்னம்பிக்கை மற்றும் ஈடுபாடு ஆகிய மூன்று வலிமையான ஆயுதங்கள் இயற்கையாகவே உள்ளன.

இந்த விலை உயர்ந்த மூன்று ஆயுதங்கள் வளரிளம் பருவ பெண்ணான் நீங்கள் எவ்வாறு உங்கள் வாழ்வின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு
எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்ள முயற்சி செய்துள்ளீர்களா?

'இல்லை' என்றால், இன்று முதல் முயற்சி செய்யுங்கள்அதுதான் வாழ்க்கை வெற்றிக்கு முதல்படி.


5.1  வெற்றிக் கனி:

முயற்சி, தன்னம்பிக்கை, மற்றும் ஈடுபாடு இந்த மூன்று ஆயுதங்களைச் சரியான வகையில் தரமான முறையில தொடர்ந்து பயன்படுத்திய பல பெண்கள், வாழ்வில் வெற்றிக்கனிகளைத் தொடர்ந்து பறித்த வண்ணம் உள்ளனர்.

5.2  சாதனைப் பெண்மணிகள்:

அத்தகைய சாதனைப் பெண்கள்  மன அமைதியுடனும், மன நிறைவுடனும் இந்த உலகில் வாழ்கின்றனர்இத்தகைய பெண்கள் தங்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதோடு மட்டும் இல்லாமல், தங்களைச் சுற்றி உள்ளவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துள்ளனர்.

5.3  பொதுத் தேர்வில் வெற்றி:

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு மற்றும் +2 தேர்வுகளில் மாநில அளவில் முதலிடங்களைப் பிடித்த மாணவ / மாணவியர்களையும் இத்தகைய அரிய சாதனை எப்படி சாதியமாயிற்றது ?

5.3.1 கவனம் சிதறாமை...வெற்றி.

சிறிது கூர்ந்து கவனித்தால், ஒரு உண்மை புலப்படும், முயற்சி, தன்னம்பிக்கை மற்றும் ஈடுபாடு ஆகிய மூன்று ஆயுதங்களை மாணவப் பருவத்தில் தேவையான சரியான வகையில், தரமான முறையில், பொறுப்புணர்ச்சியினை உடன் சேர்த்து பெற்றோர்களை முன்னிறுத்தி கவனம் சிதறாமல், திசை மாறாமல் மேற்கொண்ட செயலாற்றலுக்குக் கிடைத்த பரிசு எனலாம்.

5.3.2  தனி மனித மகிழ்ச்சி....சமுதாய மகிழ்ச்சி.

இத்தகைய சாதனை படைத்த மாணவ, மாணவியர்களால் அவர்கள் மட்டுமின்றி அவரவர் பெற்றோர்கள், சுற்றத்தார், நண்பர்கள், ஆசிரியர்கள், பள்ளி என மிகிழ்