ஆரோக்கியமான வாழ்க்கை


ஆரோக்கிய வாழ்க்கை

7.1 நோயற்ற வாழ்வு:

" நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ", " நோயில்லாதவன் வாலிபன் ", "சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்" என்று நம் முன்னோர்களின் சிந்தனை முத்துக்கள் தமிழ் சமுதாயத்தில் காலம் காலமாக உலாவிக் கொண்டிருக்கிறதுஆனால், நம்மில் எத்தனை பேர் உடல் ஆரோக்கியமாக மற்றும் மன ஆரோக்கியமாக உள்ளோம் ? பல கோடி மக்களில், சில லட்சம் மக்கள் இருக்கலாம் ! ஏன் இந்த ஆரோக்கியமற்ற சூழ்நிலை.


7.2 ஆரோக்கிய விழிப்புணர்ச்சி:

உடல் என்பது ஒரு அற்புதமான இயந்திரம்மற்ற இயந்திரங்களைப் போல் இல்லாமல் மனித உடலுக்கு ஒர் அற்புதமான ஆற்றல் இருக்கிறதுநம்மில் பலருக்கு ஆரோக்கிய வாழ்க்கை பற்றிய விழிப்புணர்ச்சி இல்லைஅவ்வாறு ஆரோக்கிய வாழ்க்கை பற்றிய விழிப்புணர்ச்சி வழி வாழ முயற்சி இல்லை.

7.3 உடலுக்குத் தேவையான 5 சத்துக்கள்:

மனிதனின் உடலுக்குத் தேவையான உணவுச் சத்துக்கள் ஐந்து: புரதம், மாவுப்பொருள்கள், கொழுப்பு, நீர், தாது உப்புக்கள்உணவுச் சத்துக்களையும் தவிர மேலும் சில சத்துக்கள் உடலுக்குத் தேவைப்பட்டன.

7.4 ஹாப்கின்ஸ் சோதனை:

1901 ஆம் ஆண்டில் பேராசிரியர் ஹாப்கின்ஸ் என்பவர் இங்கிலாந்தில் சில பரிசோதனைகள் நடத்தினார்பரிசோதனைக்கான எலிகளுக்கு புரதம், மாவுப் பொருள்கள், கொழுப்பு, நீர், தாது உப்புகள் என்று இந்த ஐந்து சத்து பொருட்களையும் சரியான அளவில் கொடுத்து வந்தார்ஆனால் அந்த எலிகளோ காலப்போக்கில் மெலிந்து கடைசியில் இறந்து போயின.

7.5 உணவுச் சத்துக்கள், துணை உணவுச் சத்துக்கள்:

நிறைந்த அளவு உணவு உண்ணுவதற்கு இருந்தும் எலிகள் உயிர் வாழாமல் போயினஅது ஏன் என்று மேற்சொன்ன எலிகள் சோதனையிலிருந்து ஹாப்கின்ஸை சிந்திக்கத் தூண்டியதுஇந்த ஐந்து சத்துப் பொருட்கள் இல்லாமல் வேறு ஏதோ சில துணை உணவுச் சத்துக்கள் கட்டாயம் ஒரு பிராணியின் உணவில் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு ஹாப்கின்ஸ் வந்தார்.

அந்த துணை உணவுச் சத்துக்கள் மிகக் குறைந்த  அளவே உணவில் இருந்தாலும், மிகவும் இன்றியமையாதவை என்று பேராசிரியர் ஹாப்கின்ஸ் கருதினார்.

7.6 ஆரோக்கியத்திற்கு வைட்டமின்கள் தேவை.

பேராசிரியர் ஹாப்கின்ஸ் வேறு சில எலிகளுக்கு மேற்சொன்ன ஐந்து உணவுச் சத்துக்களுடன் சிறிது பால் கொடுக்கத் தொடங்கினார்அப்போது அந்த எலிகள் ஆரோக்கியமாக இருந்ததைப் பார்த்தார்.


பாலில் உயிருக்கு தேவையான் சில சத்துப் பொருட்கள் இருக்க வேண்டும் என்பதை பேராசிரியர் ஹாப்கின்ஸ் கண்டு பிடித்தார்நவீன காலத்தில் மேற்சொன்னது போன்ற பல உணவுச் சத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனஇவற்றைத்தான் நாம் வைட்டமிங்கள் என்கிறோம்.

7.7 வைட்டமின் , பி, சி, டி, , கே :

இயற்க்கையாக கிடைக்கும் காய்கறி, கனிகள், இறைச்சி போன்ற உணவுப் பொருட்களில் வைட்டமின்கள் மிகச் சொற்பமான அளவே காணப்படுகின்றனஇவற்றிக்கு வைட்டமின் , பி, சி, டி, , கே (A, B. C, D, E, K) என்று பெயர் கொடுக்கப்பட்டுள்ளனமனிதனின் ஆரோக்கியத்திற்க்கும், உடல் நலத்திற்கும் இந்த வைட்டமின்கள் மிகமிக அவசியம்.

7.8 வைட்டமின் குறைவும், நோயும்:

உடலில் உள்ள ஒவ்வொரு வைட்டமினும் குறிப்பிட்ட வேலையை உடலில் நடத்தக் கூடியதாயுள்ளதுஇவற்றில் ஏதாவது ஒன்று குறைவுபட்டாலும் மனித உடலில் நோய்கள் உண்டாகும்இவற்றிக்கு பற்றாக் குறை என்று பெயர், உயிர்ச்சத்து பற்றாக்குறை தொடர்ந்து இருக்குமானால் மரணம் சம்பவிக்கக் கூடும்.

7.9 வைட்டமின்களின் பாகுபாடு:

வைட்டமின்களை அவற்றின் கரைதிறனைக் கொண்டு இரண்டு பிரிவுகளாகப் பிரித்துள்ளனர்.

1.  கொழுப்பில் கரையக் கூடியவை.
2. நீரில் கரையக் கூடியவை.

7.9.1 கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள்:

1.  வைட்டமின் '' ( A )
2.  வைட்டமின் 'டி' ( D )
3.  வைட்டமின் '' ( E )
4.  வைட்டமின் 'கே'  (K )

7.9.2  நீரில் கரையக்கூடிய வைட்டமின்கள்:

1.  வைட்டமின் 'பி' ( B )
2. வைட்டமின் 'சி' ( C )

எண்ணம்:

உன் எண்ணத் மாற்று,
உன் நம்பிக்கை மாறும்.

உன் நம்பிக்கையை மாற்று,
உன் எதிர்பார்ப்பு மாறும்.

உன் எதிர்பார்ப்பை மாற்று,
உன் மனப்பான்மை மாறும்.

உன் நடவடிக்கையை மாற்று,
உன் செயல்திறன் மாறும்.

உன் செயல்திறனை மாற்று,
உன் வாழ்க்கை மாறும்.