சிந்தனை சிற்பி ஓர் அறிமுகம்


சிந்தனை சிற்பி
கே .பாலசுப்பிரமணியன்
B.E, M.B.A, M.Phil(Mgt), D.C.P.I.C., P.G.D.F.M.,



சிந்தனை சிற்பி ஒரு அறிமுகம்:

சிந்தனை சிற்பி கே. பாலசுப்ரமணியன் திருச்சியை சேர்ந்தவர்.

* சிந்தனை சிற்பி பி.இ (மெக்கானிக்கல்), எம்.பி.ஏ (மார்க்கெட்டிங்), எம்.ஃபில்(மேலாண்மை) படித்தவர்,

1. மேலாண்மை ஆலோசகர்(Management Consultant):

சிந்தனை சிற்பி கே. பாலசுப்ரமணியன் கிரியேடிவ் மேனேஜ்மெண்ட் கன்சல்டன்சி என்ற நிறுவனத்தை 1993 ஆம் ஆண்டு தொடங்கி, தற்சமயம் 75க்கும் மேற்ப்பட்ட நிறுவனங்களுக்கு மேலாண்மை ஆலோசகராக உள்ளார்.

2. மேலாண்மை பேராசிரியர்(Management Professor):

தமிழகத்தில் 15 க்கும் மேற்பட்ட பல்கலை கழகங்கள், 20 க்கும் மேற்பட்ட கல்லூரிகளூக்கு எம்.பி.ஏ பேராசிரியராக, 40க்கும் மேற்பட்ட மேலாண்மை பாடங்களை போதிக்கிறார். கடந்த 15 ஆண்டுகளில் 10,000 க்கும் மேற்பட்ட எம்.பி.ஏ மாணவர்களை உருவாக்கியவர்.

UGC - ன் ஆசிரியர் திறன் ஊக்க பயிற்சி முகாமில், இந்தியாவின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த 250 க்கும் மேற்பட்ட மேலாண்மை ஆசிரியர்களை உருவாக்கியவர்.

3. மனித வள மேம்பாடு பயிற்சியாளர் (Corporate Trainer)

மனித வள மேம்பாடு பயிற்சியாளர், கடந்த 16 ஆண்டுகளில் 6000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், பொறியாளர்கள், அலுவலர்கள் மற்றும் மேலாளலர்களுக்கு தனி மனித மேம்பாட்டு வகுப்புகள் மூலம் அவர்கள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியவர்.

திருச்சி BHEL, HRDC நிறுவனத்தில் மட்டும் 4000 ஊழியர்கள், பொறியாளர்கள், மேலாளர்களுக்கு மனித வள மேம்பாடு பயிற்சியாளர்.

மேலும் 1000க்கும் மேற்பட்ட TNAE (Tamilnadu Agriculture Engineering), TAMIN, SPIC மற்றும் அரசு துறை UCO BANK, VYSYA BANK அரசு சார்ந்த் நிறுவனம் மற்றும் தனியார் நிறுவன அலுவலர்களுக்கு மற்றும் இஞ்சினியர்களுக்கு தனி மனித மேம்பாட்டு பயிற்சியாளர்.

4. மேலாண்மை புத்தக எழுத்தாளர்(Management Book Writer):

26 மேலாண்மை புத்தகங்களை ஆங்கில மொழியில் எழுதியுள்ளார். இவர் சிறந்த ஒரு நிர்வாக பயிற்ச்சியாளர்.

இவருடைய மேலாண்மை புத்தகம் (Enterprise wide Information System) பாரதிதாசன் பல்கலைகழகத்தில் BCA, B.Sc (CS) பயிலும் மாணவர்களுக்கு 5 ஆம் பருவத்திற்க்கு Emerging Trend in Information Technology என்ற பாடத்திட்டத்திற்க்கு ஒரே பாடபுத்தகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாட்டிலுள்ள பல கல்லூரிகளில் Strategic Management, BPR, SCM, ERP, CRM போன்றவற்றிக்கு இவருடைய புத்தகங்கள் பாட புத்தகங்களாக கருதப்பட்டுள்ளது.

5. சுயமுன்னேற்ற புத்தக எழுத்தாளர்(Self Development Book Writer):

பேராசிரியர் சிந்தனை சிற்பி கே .பாலசுப்பிரமணியன் அவர்கள் பாதம்பதிப்பகம் எனும் நிறுவனத்தை நிறுவி இதுவரை 8 தன்னம்பிக்கை நூல்களை தமிழ் மண்ணிற்கு அளித்துள்ளார். கடந்த 20 மாதங்களில், ஒரு லட்சம் பிரதிகள் விற்பனை மூலம் லட்சகணக்கான தமிழர்களின் வாழ்வில் தன்னம்பிக்கை ஊட்டியுள்ளார்.

6. தன்னம்பிக்கை பேச்சாளர்(Motivational Speaker):

பேராசிரியர் சிந்தனை சிற்பி கே .பாலசுப்பிரமணியன் 25,000 -க்கும் மேற்பட்டோர் வாழ்வில் தன்னம்பிக்கை தனிநல ,பொதுநல உணர்வுகளை வளர்த்துள்ளார்.

இந்திய நாடு 500 ஆண்டுகளுக்குப் பிறகு, அடுத்த 40 ஆண்டுகளில் 37 மடங்கு பொருளாதார வளர்ச்சி பெற்று உலக அரங்கில் வல்லரசு விளங்க உள்ளது. இந்தியாவில் 1000ல் ஒருவருக்கு கூட இவ்விழிப்புணர்ச்சி இல்லை.

எனவே சிந்தனை சிற்பி கே. பாலசுப்பிரமணியன் அவர்கள் இத்தகைய தன்னம்பிக்கை மற்றும் விழிப்புணர்ச்சி சிந்தனையை பள்ளி, கல்லூரி, பல்கலைகழக மாணவ, மாணவியர் மத்தியில் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.


7. சமூக சேவகர்: (Social Worker):

சிந்தனை சிற்பி திரு கே. பாலசுப்பிரமணியன் அவர்கள் Genius Academy என்ற அறக்கட்டளையை நிறுவி தமிழகத்தில் ஆயிரக்கணக்கான பிற்படுத்தப்பட்ட, சமுதாயத்தில் தாழ்த்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தொழில் சார்ந்த பயிற்சி வகுப்புகளை தமிழகத்தின் பல்வேறு பிரிவுகளில் நடத்தி வருகிறார். இவருடைய சேவையைப் பாராட்டும் விதமாக இந்திய வருமான வரித்துறை, இவருடைய அமைப்பிற்க்கு வழங்கப்படும் பொதுமக்களின் நன்கொடைக்கு 80G பிரிவின் கீழ் வரிவிலக்கு அளித்துள்ளது.

Genius Nursery & Primary School என்ற பள்ளியை 4 ஆண்டுகளுக்கு முன் புதுக்கோட்டை மாநகரில் நிறுவி சீறும் சிறப்போடும் நிறுவி, நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு முழுமையான கல்வியை நவீன தரத்துடன் அளித்து அந்த மாவட்டத்தின் மாதிரி பள்ளி என்ற அந்தஸ்தையும் பெற்றுள்ளார்.

இண்டிராக்ட், ரோட்டராக்ட் மற்றும் ஜேஸிஸ் இயக்கங்கள் மூலம் சமுதாயத்தொண்டு ஆற்றியவர்.ஜேஸிஸ் இயக்கத்தில் மண்டல பயிற்சியாளர் மற்றும் முன்னாள் இந்திய ஜூனியர் சேம்பரின் தமிழக மண்டல ஆலோசகர்.






மேலும் தெரிந்துகொள்ள

வளரிளம் பருவம் : வெற்றிப் பருவம்


1.1 மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுக் கொடுக்க வேண்டுமா ?

உலகமே வியக்கும் பாரதப் பெண்ணுக்கு, குறிப்பாக தமிழ்ப் பெண்ணுக்கு பண்பாட்டைப் பற்றி, வாழும் முறையைப் பற்றிக் கற்றுக் கொடுக்க வேண்டுமா ?

உண்மையில் தேவையில்லை !

1.2 இந்தியப் பெண்ணின் பாரம்பரிய சொத்து

நலமான வாழ்க்கை முறை, மகிழ்ச்சிகரமான வாழ்க்கை முறை, நிறைவான வாழ்க்கை முறை என்பது ஒவ்வொரு இந்தியப் பெண்மணியின் பாரம்பரிய சொத்து, சொல்லப்போனால், அவைகள் ஒவ்வொரு இந்தியப் பெண்ணின் இரத்தத்தில் ஊறியது. ஆனால் பாரதப் பெண், குறிப்பாக இன்றைய வளரிளம் பருவப் பெண்கள் மேலை நாட்டு நாகரீகம் மற்றும் மேலை நாட்டு கலாச்சார வாழ்க்கை முறைத் தாக்கத்தால், மனதளவில் தடுமாற்றத்தில் இருக்கிறார்கள்.

1.3 வளரிளம் பருவம் - முதல் தடுமாற்றம்:

வளரிளம் பருவப் பெண்ணின் முதல் தடுமாற்றம், நமது முன்னோர்கள் வாழ்ந்த இந்திய பாரம்பரிய முறைப்படி வாழ்க்கையை அமைத்துக் கொண்டு வாழ்வதா?

1.4 வளரிளம் பருவம் - இரண்டாவது தடுமாற்றம்

வளரிளம் பருவப் பெண்ணின் இரண்டாவது தடுமாற்றம், இந்தியப் பண்பாட்டின் கட்டுக்கோப்பான உள்நோக்கிய, ஆனந்தத்தைத் தேடும் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதா ? அல்லது பணத்தை அடிப்படையாக கொண்ட மேலைநாட்டுப் பண்பாட்டின் படி, வெளிநோக்கிய பயண வாழ்க்கையை வாழ்வதா ?

1.5 வளரிளம் பருவம் - மூன்றாவது தடுமாற்றம்

வாழ்க்கை முறையறிந்து, அமைதியான வாழ்க்கையை இந்தியப் பண்பாட்டின் வழி நல்வழியில் வாழ்வதா ? அல்லது கண்டதே வாழ்க்கை, கொண்டதே கோலம் என்று ஆரம்பத்தில் இன்பம், பிறகு வாழ்நாள் முழுவதும் துன்பம் மற்றும் அமைதி இன்மை என்று மேலை நாட்டுப் பண்பாட்டின் வழி வாழ்வதா ?

1.6 சிந்தனை செய் மனமே:

வளரிளம் பருவப் பெண்களுக்கு தேவை இக்கணம், இந்தியப் பண்பாடு மற்றும் மேலை நாடுகளின் பண்பாடு என்ற இரண்டிலும் உள்ள நிறை மற்றும் குறைகளை நன்கு ஆராய்ந்து பார்க்கும் மனப்பக்குவம். மேலும், வளரிளம் பருவப் பெண்கள், இன்றைய செயலுக்கான எதிர்கால விளைவுகளைச் சீர்தூக்கிப் பார்த்து, தெளிவாக உணர்ந்து, தீர்க்கதரிசனமான முடிவை தொலை நோக்குப் பார்வையோடு எடுக்க வேண்டும். பிறகு, அந்த முடிவின் வழி, ஒரு வளரிளம் பருவப் பெண் தனது வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

1.7 தேவையற்ற சிக்கல்:

வளரிளம் பருவத்தில் உள்ள பெண்கள் பல ஊடகங்கள் மூலம் வரும் தவறான செய்திகள் மற்றும் செவிவழியாக வரும் செய்திகளால் தடுமாற்றம் அடைகின்றனர். அவற்றின் விளைவு, வளரிளம் பருவத்தில் கேடு விளைவுக்கும் சில மற்றும் பல நடத்தைகளில் ஈடுபட்டு, உடல் நலப் பிரச்சனைகளில் மற்றும் மன நலப் பிரச்சனைகளில் சிக்கிக் கொண்டு அல்லல்படுகின்றனர்.

1.8 பிரச்சனைகளுக்கு காரணங்கள்

மெலும், வளரிளம் பெண்களின் உடலின் ஹார்மோன்களால் ஏற்படக்கூடிய மாற்றங்கள் ஒரு புறம், உடனிருக்கும் நண்பர்களின் வற்புறுத்தல்கள் மறுபுறம், இவை எல்லாவற்றையும் இளைய தலைமுறை கோணத்தில் பார்க்கத் தவறிய பெற்றோர்கள் மற்றும்
பெரியோர்களின் சொற்கள் முதலியனவும் வளரிளம் பருவப் பெண்களின் பிரச்சனைகளுக்கு காரணங்களாக விளங்குகின்றன.

1.9 வாழ்க்கைப் பாதையில் தடுமாற்றம்:

இவ்வாறு நாலாப்பக்கங்களில் இருந்தும் வெவ்வேறு செய்திகளை, வெவ்வேறு நேரங்களில், ஒன்றுக்கொன்று முரணான் கருத்துக்களைப் பெறும் வளரிளம் பருவ பெண்கள் வாழ்வில் எது சரி, எது தவறு, எப்படி நடந்து கொள்வது என்று புரியாமல் தடுமாறுகின்றனர்.

வளரிளம் பருவ பெண்ணே ! வாழ்க்கை.... வாழ்வதற்கே !
வாழ்க்கை....முரண்பாடு இல்லாமல் வாழ்வதற்கே ! !
வாழ்க்கை...இனிமையாக வாழ்வதற்கே !
வாழ்க்கை....தடுமாற்றம் இல்லாமல் வாழ்வதற்கே ! !

1.10 பருவ மாற்றம்....மாற்றம்

வளரிளம் பருவம் என்பது, ஒரு பெண்ணின் வாழ்க்கையில் குழந்தைப் பருவத்திற்க்கும், வயது வந்த பருவத்திற்க்கும் இடைப்பட்ட பருவமாகும். இந்த வளரிளம் பருவம் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிக முக்கியமான பருவம். இந்த வளரிளம் பருவத்தில்தான் ஒரு பெண்ணிடம் உடலளவில் பல மாறுதல்கள் ஏற்படுகின்றன.

1.11 மனதளவில் பலப்பல மாற்றம்:

அதேபோல், இந்த வளரிளம் பருவத்தில்தான் ஒரு பெண்ணிடம் மனதளவில் பலப்பல மாறுதல்கள் ஏற்படுகின்றன. ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிக முக்கியமான மாறுதல்கள் ஏற்படும் பருவம்தான் வளரிளம் பருவம். ஆகவே, இந்த வளரிளம் பருவத்தை எப்படி பயன் உள்ளதாக அமைத்துக் கொண்டு வாழ்வது என்பது ஒவ்வொரு வளரிளம் பருவப் பெண்ணின் கடமை.

1.12 பெண்ணின் வாழ்வில் விரைவான மாற்றம்:

ஒரு பெண்ணின் வாழ்க்கையில் உடல் வளர்ச்சி, உணர்ச்சிகள், அறிவு, உறவு முறை, நன் மதிப்பு போன்றவற்றுக்கான விரைவான் மாற்றம் இந்த வளரிளம் பருவத்தில் தான் நிகழ்கிறது.

1.13 வளரிளம் பருவம் மிக முக்கியமான பருவம்:

இந்த வளரிளம் பருவம், ஒரு பெண்ணின் வாழ்க்கையை வளமாக அமைத்திட வழிவகுக்கும் அடித்தளப் பருவம். இந்த பருவத்தில் ஒரு பெண் தன்னைப் பற்றி தன்னுடைய திறமைகளைப் பற்றி, தன் வாழ்வின் நோக்கம் பற்றி தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். பிறகு வாழ்க்கை வெற்றிப் பயணத்திற்கு ஆயத்தமாகும் மிக முக்கியமான பருவம் தான் வளரிளம் பருவம்.


1.16 வெற்றிச் சூட்சுமம்:

காவிரி ஆறு மலைப்பாங்கான கர்நாடக வனப் பகுதியில் உற்பத்தி ஆகிறது. ஆடுதாண்டு காவிரியாக இருந்த காவிரி, அகண்ட காவிரியாக திருச்சி மாவட்டத்தில் வந்து கல்லணையின் மூலம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை செழிப்படைய செய்து, பூம்புகார் என்ற காவிரிப் பூம்பட்டிண்த்தில் வங்கககடலில் கலக்குகிறது.

கர்நாடக மாநிலத்தில் உற்பத்தி ஆன காவிரி ஆறு நூற்றுக்கணக்கான மைல் பயணம் செய்வதற்க்கு காரணம், முறையாக காவிரி ஆற்றுக்கு இரண்டு கரைகள் உள்ளதுதான்.

அந்த காவிரி ஆற்றில், இரண்டு கரையில், ஒரு கரை உடைந்ததால், பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்திற்க்கு அந்த தண்ணீர் பயன் உள்ளதாக அமையுமா? காவிரி ஆற்றின் தண்ணீர் கடலை வந்து சேருமா?

வளரிளம் பெண்ணே! சற்று சிந்தி உடைந்த கரை வெள்ளக்காடாக ஒரு இடத்தையோ ஒரு ஊரையோ மாற்றி விடும்.

இதே போல், உன் வாழ்க்கையை ஒரு வரைமுறைக்குள் நல்லது கெட்டது எது என்று உணர்ந்து, அத்தகைய வரைமுறைக்குள் உன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால், வாழ்க்கையில் பலப்பல அரிய சாதனைகள் படைக்கலாம்.

இதுவே வெற்றியாளர்களின் "வெற்றி சூட்சமம்". இதனை நீங்களும் இன்று முதல் பயன்படுத்தி வாழ்க்கையில் பலப்பல வெற்றிகள் அடைய வாழ்த்துக்கள்.



மாணவ, மாணவிகளுக்கு பத்து அம்ச உறுதிமொழி:


1. நான் எனது வாழ்க்கையில் நல்லதொரு இலட்சியத்தை மேற்கொள்வேன்.

2. நன்றாக உழைத்து படித்து, என் வாழ்க்கை இலட்சியத்தை அடைய முற்படுவேன்.

3. நான் எனது விடுமுறை நாட்களில் எழுத படிக்கத் தெரியாத ஐந்து பேருக்கு எழுத படிக்கச் சொல்லிக் கொடுப்பேன்.

4. என் வீட்டிலோ அல்லது பள்ளியிலோ குறைந்தபட்சம் ஐந்து செடிகளையாவது நட்டு, அதைப் பாதுகாத்து வளர்த்து மரமாக்குவேன்.

5. மது, சூதாடுதல் மற்றும் போதைப் பழக்கங்களுக்கு ஆளாகித் துயருறும் ஐந்து பேரையாவது அதிலிருந்து மீட்டு, நல்வழிப்படுத்த நான் முயல்வேன்.

6. துயருறும் ஐந்து பேரையாவது சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் அளித்து, அவர்களின் துயரைத் துடைப்பேன்.

7. நான் சாதியின் பெயரிலோ, மதத்தின் பெயரிலோ, இனத்தின் பெயரிலோ, மொழியின் பெயரிலோ எந்தவிதப் பாகுபாடும் பாராட்டாது எல்லோரிடமும் சமமாக நடந்து கொள்வேன்.

8. நான் வாழ்க்கையை நேர்மையாக நடந்து கொண்டு மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக் காட்டாக இருக்க முயல்வேன்.

9. நான்,என் தாய், என் தாய் நாடு இரண்டையும் நேசித்துப் பெண் குலத்திற்க்குரிய மரியாதையும், கண்ணியத்தையும் அளிப்பேன்.

10. நான், நாட்டின் அறிவு தீபத்தை ஏற்றி அணையாத தீபமாகச் சுடர்விடச் செய்வேன்.


- ஏ. பி ஜே. அப்துல் கலாம்
முன்னாள் குடியரசுத் தலைவர்.


வளரிளம் பருவம்: வாழ்கையில் முக்கிய பருவம்

2.1  பிட்டியூட்டரி சுரப்பி:

வளரிளம் பருவத்தின் மாற்றங்கள் ஒரு பெண்ணின் உடலில், நாளமில்லா சுரப்பியான, பிட்டியூட்டரி சுரப்பியால் சுரக்கும் திரவங்களின் மூலமாகத் தூண்டப்படுகின்றன.

வளரிளம் பெண்ணின் பாலியல் உணர்வுகளைக் கட்டுபடுத்தவும் இந்த பிட்டியூட்டரி திரவங்கள் துணை புரிகின்றன.


2.2  இரண்டுங்கெட்டான் வயது:


நமது கிராமங்களில், இந்த வளரிளம் வயதினரை நமது முன்னோர்கள் இரண்டுங்கெட்டான் வயதினர் என்று அழைப்பார்கள்அது ஏன் ? இந்த வளரிளம் பருவத்தினர் மிக்க உணர்ச்சிவயப்படும் தன்மை உடையவர்கள், மேலும் வளரிளம் பருவத்தினர் திடீர் உணர்ச்சிகட்கு ஆட்படக்கூடியவர்கள்.

2.3  செயல் இரு துருவங்கள்:

இந்த வளரிளம் பருவத்தினர், இரண்டு துருவத்தில் ஏதாவது ஒரு துருவத்தில், அதாவது வடதுருவம் அல்லது தெந்துருவம் என்ற நிலையில் இருப்பார்கள்.

உதாரணமாக, வளரிளம் பருவத்தினர் குழுவில் சேர்ந்திருப்பார்கள் அல்லது தனியாக இருப்பார்கள்.

இதே போல், இந்த வளரிளம் பருவத்தினரிடம் பலவற்றைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் இருக்கும் அல்லது எதிலும் ஈடுபாடு கொள்ளாத தன்மை இருக்கும்.

மேலும், இந்த வளரிளம் பருவத்தினர், மிகுந்த தன்னம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள் அல்லது அதற்கு எதிர்மாறாக தன்னைத் தானே சந்தேகிக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

2.4  உணர்வுகளை அறிதல்:

மனித வாழ்வில் குறிப்பாக ஒரு பெண்ணின் வாழ்வில், உடல் மற்றும் மன வளர்ச்சியின் பெரும் மாற்றங்கள் அனைத்தும் இந்த வளரிளம் பருவத்தில் நிகழ்ந்து முடிந்து விடுகின்றன.

ஒரு பெண்ணின் உடலில் உள்ள உணர்வுகள் கொப்பளித்து வெளிவரும் காலமும் இந்த வளரிளம் பருவம்தான்ஆகவே இந்த வளரிளம் பருவத்தில் ஒரு பெண் உணர்வுகளை தன் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்அதன் முதல் படிதான், "தன் உணர்வுகளை தான் தெளிவாக அறிதல்".

2.5  வாழ்க்கையில் முக்கிய பருவம்:

வளரிளம் பருவம்,ஒரு பெண்ணின் வாழ்க்கையில் முக்கிய்ப் பருவம். அந்த வளரிளம் பருவத்தில் ஒரு பெண் தன்னுடைய முழு வாழ்க்கைக்குத் தேவையான் ஆக்கப்பூர்வமான செயல்களைத் திட்டமிட்டு, பலமான  அடித்தளத்தை அமைத்துக் கொள்ளும் பருவம்.

இந்த பருவத்தில் ஒரு பெண்ணுக்குத் தேவையான விஷயங்கள் என்று பல இருக்கின்றனதனக்குத் தேவையான் விஷயங்கள் என்ன என்று இனம் கண்டு கொண்டு வளரிளம் பருவ பெண் அவற்றை அறிய முற்பட வேண்டும்.

இந்த பருவத்தில் ஒரு பெண்ணுக்குத் தேவையான, தேவையற்ற விசயங்கள் என்று பல இருக்கின்றனதனக்குத தேவையான விஷயங்கள் என்ன என்றும், தனக்குத் தேவையில்லத விஷயங்கள் என்ன என்றும் தெரிந்து கொண்டு அவற்றை நன்றாக அலசி ஆராந்து அவற்றை தெளிவாக கண்டறிய வேண்டும்.

பிறகு வளரிளம் பருவப்பெண் சுய சிந்தனையை மற்றும் தெளிவான சிந்தனையை, தொலைநோக்குப் பார்வையோடு வளர்த்துக் கொண்டு, தனக்குத தேவையான விஷயங்கள் மட்டும், தன்னை நெருங்கும் வண்ணமும், தேவையற்ற பல விஷயங்கள் தன்னை நெருங்காத வண்ணமும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வளரிளம் பருவப் பெண்ணே! இத்தகைய சுய சிந்தனை வழி பாதுகாப்புப் போர்வை, காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல, வளரிளம் பருவத்தின் கட்டாயமும் கூட.


2.6  வளரிளம் பருவத்தில் செய்ய வேண்டிய செயல்கள்:

இந்த வளரிளம் பருவத்தில் ஒரு பெண் ஆக்கவழியில் வாழ்க்கையை  அமைத்துக் கொள்ள செய்ய வேண்டிய செயல்கள்:

1.  ஏட்டுக் கல்வி மற்றும் வாழ்க்கைக் கல்வியில் கவனம் இருத்தல்.

2.  உடலை மற்றும் மனதை ஆரோக்கியமாகப் பராமரித்து, சுறுசுறுப்பாக இருத்தல்.

3.  நேரத்தை முறையாகக் கையாளுதல்.

4.  தன்னைப் பற்றி சிந்தித்து தன்னுடைய திறமைகளைப் புரிந்து கொண்டு, தனித்துவம் வளர்த்துக் கொள்ளுதல்.

5.  வாழ்க்கையில் அடைய வேண்டிய இலக்கை நிர்ணயித்தல்.

6.  தன்னையும், மற்றவர்களையும் மதித்தல், குறிப்பாக பெற்றோர் மற்றும் பெரியவர்களை மதித்தல்.

7.  நல்ல புத்தகங்களை படித்து, நல்ல ஆரோக்கிய சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளுதல்.

8.  நல்ல செய்திகளை, பலப்பல தினசரிகளில் மற்றும் வார, மாத பத்திரிக்கைகளில் இருந்து படித்து தெரிந்து கொண்டு அறிவை விசாலப்படுத்திக் கொள்ளுதல்.

9.  நல்ல ஆரோக்கியமான நட்பை தேடிக்கொல்ளுதல்.

10. தொலைபேசி அல்லது கைபேசியைத் தொலைத் தொடர்பு சாதனமாக ஆக்கப்பூர்வமான எண்ணம் மற்றும் செயல்களுக்குப்
பயன்படுத்துதல்.

11.  உள்நோக்கு சிந்தனைக்காக நேரம் ஒதுக்கி, இதய இசையைக் கவனித்து உள்ளொளி பெருக்குதல்.

12.  உணவு, உழைப்பு, உறக்கத்திற்க்கு முக்கியத்துவம் அளித்து, உன்னத வாழ்க்கைக்கு அடிகோலுதல்.

13.  இண்டர்நெட்டில் நல்ல விஷயகளைத் தேடிக் கண்டுபிடித்து, ஆக்கபூர்வமான நண்பர்கள் வட்டத்தில் இருந்து தினம், தினம் நல்ல செய்திகளைப் பெற்று நல்ல  சிந்தனையை மேலும் வளர்த்துக் கொள்வது.

14.  நல்ல ஆரோக்கிய உணவைஉணவு முறை அறிந்து மற்றும் உணவு குணம் அறிந்து குறித்த வேளையில் குறித்த உணவை சாப்பிட்டு, உடல் ஆரோக்கியத்தைப் பேணுதல் மற்றும் மன ஆரோக்கியத்தை வளர்த்துக் கொள்ளுதல்.

15.  நல்ல ஒரு உடற்பயிற்ச்சியை தேர்ந்து எடுத்து, தினமும் 20 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை உடலில் உள்ள அழுக்கை வியர்வை துளியாக வரும் வரை செய்து, உடல் ஆரோக்கியத்தைப் பேணுதல்.

16. மனப் பயிற்ச்சியாக ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம் என்ற கருத்துக்கு ஏற்ப, ஏட்டுக் கல்வி தவிர, வாழ்க்கை கல்விக்கு என்று தினம் 10 முதல் 15 நிமிட நேரம் ஒதுக்கி நல்ல அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு நூல்களைப் படிக்கவும்.

17. இரவில் சீக்கிரம் படுத்து, நன்றாக உறங்கி, காலையில் சீக்கிரம் எழுந்து, ஒரு நாளில் காலை முதல் இரவு வரை புத்துணர்ச்சியுடன் மிக சுறுசுறுப்பாக இருப்பது.


வளரிளம் பருவத்தில் செய்யக் கூடாத செயல்கள்:

இந்த வளரிளம் பருவத்தில் ஒரு பெண்ணுகுத் தேவையான கீழ்கண்ட எட்டு செயல்கள் :

1.  பொழுதுபோக்கு என்ற போர்வையில் தொலைக்காட்சி முன் பெரும்பான்மை நேரத்தைச் செலவிடுதல்.

2.  எதிர்பாலினரை ஈர்ப்பதற்காக பொருத்தமில்லாத நடை மற்றும் உடைகளை விருப்புதல்.

3.  காதல் வயப்படுதல்.

4.  எதற்கெடுத்தாலும் அடுத்தவர்களைக் குறை கூறுதல்.

5.  சுய பச்சாதாபம்.

6.  சோம்பேறித்தனம்.

7.  இரவு கண்விழித்து இருந்துவிட்டு, காலை வேளையில் தூங்கி, அரிய அதிகாலை நேரத்தை ஆக்க வழியில் செலவழிக்காமல் கோட்டை விடுவது.

8.  இதய இசையை ரசிக்காமல், ரேடியோ இசை, குறுந்தட்டு இசை என்று வெளி இசையில் ஈர்க்கப்பட்டு, ஒரு நாளில் அதிகமான நேரம் வீணாக செலவு செய்தல்.


2.8  வயது மனித மன வளர்ச்சி:

வாழ்க்கையில் பின்னாளில், ஒரு பெண் அடைய இருக்கும் பல வெற்றிக்குக் களம் அமைத்துக் கொடுக்க வேண்டிய பருவம் இந்த 1-18 வயது காலகட்டம் ஆகும்.

ஆகவேதான், இந்த வளரிளம் பருவம், ஒரு பெண்ணின் வாழ்வில் மிக மிக முக்கியம் வாய்ந்த பருவமாகும்.


2.9  வளரிளம் பருவக் காலத்தில் தவிர்க்க வேண்டிய குணங்கள் மற்றும் பண்புகள்:

இந்த வளரிளம் பருவக் காலத்தில் ஒரு பெண், தவிர்க்க வேண்டிய குணங்கள் கீழ்கண்ட பத்து.

1. கோபம்
2. பொய் சொல்லுதல்
3. சோம்பல்
4. முயற்சியின்மை
5. ஆர்வமின்மை
6. மதிப்பின்மை
7. கவனம் சிதறுதல்
8. மற்றவர்களின் கவனம் ஈர்த்தல்.
9. இனக் கவர்ச்சி
10.பாட்டு / கேளிக்கைகளில் அதிக ஆர்வம்.


மனித வாழ்வில் மரங்கள்:

பிறந்தோம் தொட்டில் மரத்தின் உபயம்
நடந்தோம் நடைவண்டி மரத்தின் உபயம்
எழுதினோம் பலகை, பென்சில், காகிதம் மரத்தின் உபயம்
மணந்தோம் மாலை, சந்தனம் மரத்தின் உபயம்.
புணர்ந்தோம் கட்டில் என்பது மரத்தின் உபயம்
துயின்றோம் தலையணைப் பஞ்சு மரத்தின் உபயம்
நடந்தோம் பாதுகை ரப்பர் மரத்தின் உபயம்
பயணித்தோம் டயர், பலகை மரத்தின் உபயம்
வயதானோம் ஓய்வெடுக்கும் நிழல் மரத்தின் உபயம்
எல்லாம் முடிந்து கடைசியில் கூடவே வருகின்ற சவப்பெட்டியும், பாடையும் மரத்தின் உபயம்
சுடலை விறகும் கூட மரத்தின் உபயமே !

மரந்தான் மரந்தான் மனித வாழ்வெல்லாம் மரந்தான்
மறந்தான் மறந்தான் மனிதன் மரங்களையே மறந்தான்.

மரங்களைப் போல பிறருக்கும், பிற உயிர்களின் நலனுக்கும் தன்னலம் கருதாமல் வாழ்ந்து காட்டிய மரத்தமிழன் என்பதையே மரந்தான்.

மனிதா ! நீ மனிதனாக வேண்டுமா ?

மரத்திடம் வா !

ஒவ்வொரு மரமும் உனக்கு போதிமரம்.


வாழ்க்கை:

வாழ்க்கை ஒவ்வொரு மனிதனுக்கும் இனியது; அவன் எப்படிபட்டவனாய் இருந்தாலும் சரியே, வாழ்க்கையில், மேம்பாடு வரும் என்னும் இடையறாத நம்பிக்கை.

வாழ்க்கையில் மேம்பாடு என்பது பொருள் வளம் என்று சிலர் நினைக்கிறார்கள் வாழ்க்கையில் மேம்பாடு என்பது உளநெறி திருப்தி என்று வேறு சிலர் எண்ணுகிறார்கள்; பின்னும் சிலரோ இந்த இரண்டுமே என்று கருதுகிறார்கள்; இவர்கள் தாம் பெரும்பான்மையினர், மனிதர்களை வேருபடுத்துவது இந்தப் பிரச்சனைதான்; அவர்களுடைய செயல்களில் முதன்மை பெறுவது உளநெறித் திருப்தியா ? பொருள் வளமா ?

இதிலிருந்து பின் வரும் கருத்துக் கிளைக்கிறது;

சிலர் வாழ்வதை விரும்புகிறார், வேறு சிலர் வாழ்க்கையை விரும்புகிறார்கள்.

"நான் மூச்சு விடுகிறேன், எனவே உலவுகிறேன் என்று ஆகிறது" என்று சிலர் சொல்கிறார்கள்.

மற்றவர்களோ, "நான் மக்களுக்குப் பயன்படுகிறேன், எனவே வாழ்கிறேன்" என்று சொல்கிறார்கள்.

முதல் வகையினர் சுகமாக வாழலாம் என்று நம்புகிறார்கள்இரண்டாம் வகையினரோ, நாம் மக்களுக்கு தேவைப்படுகிறோம் என்னும் உணர்வால் பெருமை சான்ற மகிழ்வு அடையலாம் என்றே தொண்டாற்றி சிறந்து வாழ்கிறார்கள்.

                       - பேராசிரியர் தித்தோவ் - ' சாவுக்கே சவால் எனும் புதினத்திலிருந்து.


வளரிளம் பருவத்தில் உடல் ரீதியான மாற்றங்கள்


3.1 உடல் வளர்ச்சியின் பருவங்கள்:

ஒரு பெண்ணில், முதல் இருபது ஆண்டுகால வாழ்க்கையை நாங்கு பருவங்களாகப் பிரிக்கலாம்.

1.  பிள்ளை பருவம் ( 6 வயது வரை )
2. பின் பிள்ளை பருவம் ( 6 - 9 வயது வரை )
3. வளரிளம் முன் பருவம் ( 9 - 14 வயது வரை )
4. வளரிளம் பின் பருவம் (15 - 19 வயது வரை )


3.11  பிள்ளை பருவம் ( 6 வயது வரை )


பெண் குழந்தை பிறந்தது முதல் 6 வயது வரையிலான் காலக் கட்டத்தை பிள்ளைப் பருவம் என்று அழைப்பது வழக்கம்.

3.12 பின் பிள்ளை பருவம் ( 6 - 9 வயது வரை )


ஒரு பெண் 6 வயதை கடந்து, 9 வயது வரை இந்த பின் பிள்ளைப் பருவ வயதில் பிள்ளைகளின் பெரியவர்களையும், பெற்றோர்களையும் மகிழ்விக்கவும் அவர்களிடமிருந்து ஒப்புதல் பெறவும் விரும்புகின்றனர்.

இந்த பின் பிள்ளை பருவத்தில், தங்களுக்கென்று நண்பர்கள் குழுவை அமைத்துக் கொண்டு அவர்களுடன் தங்களை எப்போதும் இணைத்துக் கொள்வதையே விரும்புகின்றனர்.

ஒத்த இயல்புடைய நண்பர் குழுவை அமைத்தும் கொள்வதில் இப்பருவமே தொடக்கமாக அமைகிறதுஆண்களும், பெண்களும் தனித்தனியே நண்பர்கள் குழுவை அமைத்துக் கொள்ளவே விருப்புகின்றனர்.

இந்த பின் பிள்ளைப் பருவத்தில், புதிய அனுபவங்களைத் தேடுகின்றார்கள்அதில் தாங்களாகவே முயற்ச்சிகளில் ஈடுபடுவார்கள்.


3.31  வளரிளம் முன் பருவம் ( 9 - 14 வயது வரை )


உடலின் ஏற்படும் மாற்றங்களால் பொதுவான குழப்பம் வருகிறது.

தன் வயதினரோரடு சேர்ந்து பழகக் கற்றுக் கொள்கிறார்கள்.

ஆண் பிள்ளைகள், பெண் பிள்ளைகள் ஆகிய இருவரும் பயன் மிக்க வினாக்கள் எழுப்புகின்றனர்எதிலும் அக்கறைச் செலுத்துகின்றனர்ஆழ்ந்து சிந்திக்கின்றனர்.

பெற்றோர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து கட்டளை பிறப்பித்தால், பிடிவாதமாக அவர்களை எரிச்சல் படுத்தும் காரியங்களை செய்கின்றனர்எடுத்துக் காட்டாக எப்போதும் விளையாட்டில் கவனம், ஒழுங்கற்று ஆடை அணிதல், பிடிவாதமான பழக்கவழக்கங்கள்ம, உரத்து இசைத்தல், கொச்சை தொடர்பான செயல்களையும், வீட்டு வேலைகளையும் புறக்கணித்தல்.

சுற்றியுள்ள சமூகத்திலிருந்து ஆண் அல்லது பெண் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி கற்றுக் கொள்கிறார்கள்.


3.1.4.  வளரிளம் பின் பருவம் (15 - 19 வயது வரை )


இந்த வளரிளம் பின் பருவப் பெண்கள் ஒத்த வயதினரிடையே இருபாலரிடத்தும் பழகுவதில் அதிகமான முதிர்ச்சி பெறுகிறார்கள். 

இந்த வளரிளம் பின் பருவப் பெண்கள், சமுதாயப் பொறுப்புகளை விரும்பி ஏற்றுக் கொண்டு செயல்பட எண்ணுகிறார்கள்.

இந்த வளரிளம் பின் பருவப் பெண்கள், பெற்றோர்கள், பெரியோர்கள் ஆகியவர்களிடம் இருந்து நல்ல பழக்கத்தைக் கற்றுக் கொள்கிறார்கள்.

இந்த வளரிளம் பின் பருவப் பெண்கள், வாழ்க்கையின் உயர்நிலைகளையும், நீதி நெறிகளையும் தங்கள் வாழ்வின் வழிகாட்டியாக கொள்ளுதல் போன்ற குறிக்கோள்களை வளர்த்துக் கொள்கிறார்கள்.

இந்த வளரிளம் பின் பருவப் பெண்கள், உடலில் உண்டாகும் மாற்றங்களைக் கண்டு அதை அறிய அக்கறை கொள்ளுதல் மற்றும் ஐயத்தைப் போக்கி கொள்ள விழைகிறார்கள்.

இந்த வளரிளம் பின் பருவப் பெண்கள், எண்ணங்களில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்படுகின்றனமேலும், இந்த வளரிளம் பின் பருவப் பெண்கள், சிறிய செயலுக்குக் கூடப் பெரிதாக் வருந்துவார்கள்; கோபமாகப் பேசுவார்கள்.

இந்த வளரிளம் பின் பருவப் பெண்களிடம், மன உறுத்தல், அமைதியின்மை, கோபம் போன்ற குணங்கள் அதிகமாக காணப்படுகின்றன.

இப்பருவத்தில் தங்களைப் பற்றி அறிமுகம் செய்து கொள்வதில் மிகவும் அக்கறை காட்டுகின்றனர்பெற்றோரிடம் இதுவரை காட்டி வந்த குழந்தை தனமான பிணைப்பிலிருந்து விடுபட்டுத் தாங்களே அறிந்து கொள்ள முயற்சி செய்கிறார்கள்.


3.2.  குடும்பப் பாரம்பரியம்:

வளரிளம் பருவத்தில் இருபாலருகும் ஏற்படும் உடலியல் மாற்றங்கள் மிகவும் முக்கியமானதாகும்ஆண்களை விட பெண்கள் உயரமாக இருப்பார்கள்பருவ வயதினை எப்போது அடைகிறார்கள் என்பதைப் பொறுத்தும் குடும்ப பாரம்பரியமாக பல தனிப்பட்ட வேறுபாடுகள் ஏற்படுகின்றன.


3.3 மென்மையான உடல் வளர்ச்சி:

ஆணுக்கு பலமான் தசை வளர்ச்சியும், பெண்ணுகு மென்மையான் உடல் வளர்ச்சியும் ஏற்படுகின்றதுபெண்களுக்கு பூப்பெய்தியவுடன் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.

3.4  உயரமும் வளர்ச்சியும்:



ஆண்களுக்கு வளர்ச்சி சற்று தாமதமாக ஆரம்பித்தாலும் உயரமும், வளர்ச்சியும் அதிகமாக இருக்கும்.

3.5  இந்த வளரிளம் பருவத்தில்:

இந்த வளரிளம் பருவத்தில் அவரவர் உயரத்திற்கேற்ப அவர் தம் உடலின் எடையும் கூடும்இது அவர்கள் உட்கொள்ளும் உணவைப் பொறுத்ததுஉடலின் எடையும் உயரமும் குறிப்பிட்ட விகிதத்தில் வளர்ச்சி பெறும்.

3.6 இன உறுப்பு வளர்ச்சி:

வளரிளம் பருவத்தின் போது ஆண், பெண் இருபாலருகும் இன உறுப்புகள் முழுமையாக வளர்ச்சி பெறுகின்றனஆனால், சில ஆண்டுகளுக்கும் பிறகுதான் அவை செயல்படக்கூடிய பக்குவம் பெறுகின்றன.

3.7  மார்பக வளர்ச்சி:

மார்பக வளர்ச்சி சிறுமிக்கு 8 வயது முதல் 13 வயதிற்குள் தொடங்குகிறதுஇந்த வளர்ச்சி 13 வயது முதல் 18 வயதிற்குள் முடிந்து விடுகிறது.

3.8  இடை வளர்ச்சி:

பெண்களுக்கு குழந்தைப் பேற்றின் போது, இடை எலும்பு விரிவடைவதற்க்கு ஏற்றார்போல் குழந்தையிலேயே இடை அமைப்பு தோன்றி விடுகின்றது.